2017-02-25 15:42:00

காங்கோவில் கத்தோலிக்கருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட


பிப்.25,2017. காங்கோ சனநாயக குடியரசின் பல பகுதிகளில், கத்தோலிக்கரின் பங்குத்தளங்கள் மற்றும், நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு, அந்நாட்டில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப் பணியும் (MONUSCO), காங்கோ ஆயர் பேரவையும் (CENCO) அழைப்பு விடுத்துள்ளன.

காங்கோ திருப்பீடத் தூதரகம், காங்கோ ஆயர் பேரவை, ஐ.நா. அமைதிப் பணி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கோவில், Kinshasa, Haut-Katanga, மத்திய Kasaï, கிழக்கு Kasaï ஆகிய மாநிலங்களில், கத்தோலிக்கரின் பங்குத்தளங்கள் மற்றும், ஏனைய கத்தோலிக்க நிறுவனங்கள் தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலை தருகின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வன்முறை தாக்குதல்களை நடத்துவோர், காங்கோ குற்றவியல் பிரிவின்கீழ், தண்டிக்கப்பட வேண்டும் என, அவ்வறிக்கையில், கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.