2017-02-24 15:59:00

உலகளாவிய அமைதி நடவடிக்கைக்கு திருப்பீடம் எப்போதும் ஆதரவு


பிப்.24,2017. உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு, திருப்பீடம் எப்போதும், தனது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது என்று, இவ்வெள்ளியன்று, ஒரு கூட்டத்தில் உரையாற்றினார், கர்தினால் லொரென்சோ பால்திசேரி.

அமைதிக்கு ஆதரவாக திருப்பீடத்தின் உலகளாவிய நடவடிக்கை என்ற தலைப்பில்,  இத்தாலியின் Roveretoவில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர், கர்தினால் பால்திசேரி அவர்கள், திருப்பீடத் தூதரகங்கள் வழியாக, உலக அமைதிக்கு, திருப்பீடம் ஆற்றிவரும் செயல்களை எடுத்துரைத்தார்.

பல்வேறு மதங்கள் மற்றும், கலாச்சாரச் சூழல்களைக் கொண்ட 182 நாடுகளுடனும்,  ஐரோப்பிய ஒன்றியத்துடனும் திருப்பீடம் தூதரக உறவுகளைக் கொண்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் பால்திசேரி அவர்கள், இக்காலத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலை முன்வைக்கும் சுற்றுச்சூழல் மாசுகேடு, மக்களின் குடியேற்றம் போன்ற விவகாரங்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.