2017-02-23 15:48:00

பிரெஞ்சு தேர்தல் – வலைதளம் வழியே நவநாள் முயற்சிகள்


பிப்.23,2017. ஏப்ரல் 22ம் தேதி துவங்கவிருக்கும் பிரெஞ்சு நாட்டுத் தேர்தலையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்க சமுதாயம், நவநாள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமை என, அடுத்துவரும் 9 சனிக்கிழமைகளில், தேர்தலுக்கென செபிப்பதற்கு உதவியாக, வலைத்தளங்கள் வழியே இம்முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

Fort-de-France பேராயர், David Macaire அவர்களால், பிப்ரவரி 18 கடந்த சனிக்கிழமை இந்த இணையதள முயற்சி துவங்கப்பட்டதென்றும், 'யூடியூப்' மற்றும் முகநூல் வழியே, இம்முயற்சியில் 10,000த்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்றும், தலத்திருஅவை கூறியுள்ளது.

அரசியல் வாழ்வில் கத்தோலிக்கர்கள் இன்னும் ஆர்வமாக ஈடுபடவும், சுற்றுச்சூழல், கலாச்சாரம், பாதுகாப்பு என்று, நாட்டிற்குத் தேவையான ஒரு கருத்துக்காக அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் செபிக்கவும், இந்த முயற்சி உதவி செய்யும் என்று, இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.