2017-02-21 15:10:00

உலக சமூக நீதி நாள் மனிதரை மையப்படுத்துகிறது


பிப்.21,2017. உலக சமூக நீதி நாள், இலாபங்களுக்கு அல்ல, மனிதரை மையப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என, மும்பை துணை ஆயர் Allwyn D'Silva அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 20, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சமூக நீதி நாளன்று, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஆயர் D'Silva அவர்கள், இன்றைய உலகம், போர்கள் மற்றும் பிரிவினைகளால் நிறைந்துள்ளது, நாடுகளுக்குள்ளும், நாடுகள் மத்தியிலும், மக்களின் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு சமூக நீதி ஊக்கமளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

சமூகநலம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆயர் D'Silva அவர்கள், பாலின சமத்துவமும், பழங்குடி மக்கள் மற்றும், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் காக்கப்படும்போது, சமூக நீதி காக்கப்படுகின்றது எனவும் கூறினார்.

“தரமான வேலை வழியாக, போரைத் தடுத்து, அமைதியை நிலைநாட்டுதல்” என்ற தலைப்பில், உலக சமூக நீதி நாள், இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.