2017-02-18 15:03:00

சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டம் இயற்ற விண்ணப்பம்


பிப்.18,2017. சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுமாறு,  அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு ட்ரம்ப் அவர்களிடம் விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டம் பற்றிய வரைவுத் தொகுப்பு, ஊடகங்களில் வெளிவந்திருந்தாலும், அதில் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்பதால், ஆயர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நியு யார்க் கர்தினால் திமோத்தி டோலன் உட்பட, நான்கு ஆயர்கள் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ள விண்ணப்ப அறிக்கையில், சமய சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையை, கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க மத்திய அரசு, படிப்படியாக அழித்து வருகின்றது என்று, கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு, தனது நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என, அரசுத்தலைவர் ட்ரம்ப் அவர்கள் உறுதியளித்திருப்பதையும் நினைவுபடுத்தியுள்ளனர் ஆயர்கள்.   

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.