2017-02-13 16:40:00

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவரின் நூலுக்கு முகவுரை


பிப்.,13,2017. தான் சிறுவனாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும், அவ்வாறு நடத்தியவரை மன்னித்து வாழ்வது குறித்தும் Daniel Pittet என்பவர் எழுதியுள்ள புத்தகத்திற்கு, முகவுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சிறுவனின் வாழ்வில், அந்நிகழ்வு பல ஆண்டுகளுக்கு தன் பாதிப்பைக் கொண்டிருக்க முடியும் என்பதை 2015ம் ஆண்டு Daniel அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடியபோது உணர்ந்ததாக, 'மன்னியும், தந்தையே' என்ற புத்தகத்தின் முகவுரையில் கூறும் திருத்தந்தை, இறை ஊழியர்களால் தவறான முறையில் நடத்தப்பட்ட சிறார்களின் குடும்பங்களிடம், தான் மன்னிப்பை வேண்டுவதோடு, அவர்களுடன் தன் அன்பின் மற்றும் மனவலியின் உணர்வுகளை பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

டேனியலை தவறாகப் பயன்படுத்திய முன்னாள் அருள்பணியாளரை 44 ஆண்டுகளுக்குப்பின் அவர் சந்தித்தபோது, அருள்பணியாளரை மன்னிப்பதாக கூறியதுடன், அந்த மன்னிப்பின் அடிப்படையில் தன் வாழ்வை கட்டியெழுப்பியதாகவும், டேனியேல் அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செயல் வழியாக, அந்த முன்னாள் அருள்பணியாளர், தன் கொடூரச் செயலின் விளைவுகளை உணர்ந்திருப்பார் எனவும், அந்நூலின் முகவுரையில் எழுதியுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.