2017-02-08 16:04:00

பாசமுள்ள பார்வையில்… தன்னலம் தொடாத அன்பு தாயன்பு


கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான்.

ஒரு குழந்தை வாழ்வில் ‘குன்றின் மேலிட்ட விளக்கைப் போல்’ ஒளிவிடவும், அல்லது ‘குடத்திலிட்ட விளக்கைப் போல்’ மங்கிவிடவும் அச்சாணி ஆகிறார் தாய். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று தன் பிள்ளைக்கு எடுத்துக்காட்டாக, இருப்பவரும் தாய்தான். இதற்குக் காரணம் ஒரு குழந்தை பிறந்தது முதல் தாயின் பேச்சு, செயல், வேலை, கவனிப்பு ஆகியவற்றைத் தினமும் பார்ப்பதால், அந்நடவடிக்கைகளே அக்குழந்தையின் மனதில் ‘பசுமரத்தாணிபோல்’ பதிகின்றன.

தாயின் வார்த்தைகளைக் கேட்டுப் பின்பற்றினால் நமது வாழ்வு வளம் பெறுவது உறுதி.

தாய் நமக்கு ஒரு சிறந்த தோழியாகவும், சகோதரியாகவும், ஆசிரியையாகவும், ஆலோசகராகவும் திகழ்கிறார்.

'என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன். 'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக, நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றார் நெப்போலியன். 'அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவரால்தான் என் இலக்கிய இரசனையும் வளர்ந்தது' என்று நன்றி செலுத்தினார் ரஸ்கின்.

மறைந்த காஞ்சி மகாப் பெரியவர் சொல்கிறார், "தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவுமில்லை”, என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.