2017-02-07 15:39:00

Bangui சிறார் மருத்துவமனைக்கு, 2 இலட்சம் யூரோக்கள்


பிப்.07,2017. “அடிமைப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற சிறாரின் அழுகுரலைக் கேட்போம். அவர்களின் துன்பங்களைக் கண்டு, எவரும் அக்கறையற்றவர்களாக இருக்கக்கூடாது” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் Bangui சிறார் மருத்துவமனைக்கு, இரண்டு இலட்சம் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2015ம் ஆண்டில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, Bangui சிறார் மருத்துவமனையைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின்னர், அம்மருத்துவமனைக்கு உதவும் இரக்கப் பணிகளை ஊக்குவித்தார்.

Bangui சிறார் மருத்துவமனைக்கு உதவுவதற்கென, வத்திக்கான் அருங்காட்சியகத்தில், 2016ம் ஆண்டில், “கலைக்கும், கருணைக்கும் இடையே, கிறிஸ்துவின் உண்டியல் பெட்டி, Banguiக்கு ஒரு பரிசு” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கிடைக்கும் உதவி, இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெளிவாக அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின்கீழ் திரட்டப்பட்ட நிதி உதவி, தற்போது இந்தச் சிறார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.