2017-01-19 16:12:00

திருப்பீடமும், இஸ்ரேல் அரசும் உறவுகளை மேம்படுத்தும் முயற்சி


சன.19,2017. திருப்பீடமும், இஸ்ரேல் அரசும் தங்கள் உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, சனவரி 18, இப்புதனன்று எருசலேம் நகரில் ஒரு சந்திப்பை மேற்கொண்டன.

1993ம் ஆண்டு, இஸ்ரேல் அரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே உருவான ஓர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைக் கொணரும் ஒரு முயற்சியாக இச்சந்திப்பு அமைந்ததென்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசின் சார்பில், பன்னாட்டு உறவுகள் துறையில் பணியாற்றும் அமைச்சர் Tzachi Hanegbi அவர்களும், திருப்பீடத்தின் சார்பில், பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர், அருள்பணி Antoine Camilleri அவர்களும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

இஸ்ரேல் நாட்டில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் Giuseppe Lazzarotto அவர்களும், பேராயர் Antonio Franco அவர்களும், இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையின் சார்பில், ஆயர், Giacinto-Boulos Marcuzzo அவர்களும் இந்த ஒப்பந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.