2017-01-18 16:22:00

அருள்பணி டாம் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகள்


சன.18,2017. சனவரி 21, வருகிற சனிக்கிழமை, அல்லது, 22, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இந்திய தலத்திருஅவையைச் சார்ந்த அனைவரும், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக ஒரு நாள் செப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் விண்ணப்ப மடல்  ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க பங்கு கோவில்களிலும் இந்த சிறப்பு கருத்துக்காக மக்கள் கூடிவந்து செபிக்குமாறு கர்தினால் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடன் நகரில் பிணைக் கைதியாகக் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி டாம் அவர்கள், கடந்த 10 மாதங்களாக கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கியிருப்பது வேதனை தருகிறது என்று, கர்தினால் கிளீமிஸ் அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி டாம் அவர்களின் விடுதலை குறித்து பேச, தான் பிரதமரை நேரில் சந்திக்க விண்ணப்பித்துள்ளதாக, கர்தினால் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.