2017-01-16 16:25:00

திருஅவை அதிகாரிகளுடன் Guinea அரசுத்தலைவர் சந்திப்பு


சன.,16,2017. Guinea நாட்டு அரசுத்தலைவர், Alpha Conde அவர்கள், இத்திங்கள் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடன் ஏறத்தாழ 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களையும், வத்திக்கானின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சார்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார் Guinea அரசுத்தலைவர் Alpha Conde.

இரு நாட்டு தரப்புகளிடையே இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தைகளில், மனிதகுல முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு, சமூக நீதி, ஏழ்மை போன்றவை விவாதிக்கப்பட்டு, குடிபெயர்தல் பிரச்சனையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இத்தகைய ஒரு சூழலில், நாட்டின் கத்தோலிக்க திருஅவை, கல்வி, நல ஆதரவு, மதங்களிடையே உரையாடல் போன்றவை வழியாக ஆற்றிவரும் பங்களிப்பும் வலியுறுத்தப்பட்டது.

Guinea நாடு, தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி நிலவ ஆற்றவேண்டிய பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.