2017-01-16 16:57:00

115 ஆண்டுகளில் அதிக வெயில் : 2016ல் 700 பேர் பலி


சன.,16,2017. 2016ம் ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில், வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர் என, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது.

கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து, பதிவான வெப்ப நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2016ல், வெப்பம் அதிகம் எனவும், மிகவும் அதிகமாக, ராஜஸ்தான் மாநிலம், பலோடியில், 51 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2016ல், கடும் மழை, அதிக வெயில் என பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணங்களால், 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த்தில், 40 விழுக்காட்டினரின் மரணத்திற்கு, மழை, வெள்ளமும், மேலும் 40 வுழுக்காட்டினரின் மரணத்திற்கு வெயிம் காரணமாக இருந்துள்ளன.

வெயிலுக்கு, 700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்,

கடும் குளிருக்கு, 53 பேரும், மின்னல் தாக்கி, 415 பேரும் பலியாகினர்.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், இயல்பைவிட, 55 சதவீதம் குறைவான அளவு மழை பெய்தது எனவும், கடந்த, 1901ல் இருந்து பதிவான, மிகவும் குறைவான மழையளவுகளில், இது 5வது இடமாகும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.