2017-01-13 15:19:00

பாசமுள்ள பார்வையில்...: நித்தம் நித்தம் சுமக்கும் பூமித்தாய்


பெற்றெடுத்தல், தாய் கடனாகவும், அம்மகனை சான்றோனாக்குதல், தந்தை கடனாகவும் நோக்கப்படுகிறது. பெற்றெடுத்தல் என்பது, கருவில் உருவானது முதல், கண்ணால் காணும் நிலை வரை, என அர்த்தம் சொல்வர். பத்து மாதம் சுமக்கும் கணக்கு இது. ஆனால், அன்னை பூமியோ நித்தம் நித்தம் நம்மைச் சுமப்பவர். அந்த பூமித் தாய் நமக்குத் தரும் கொடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே பொங்கல். உயிர்கள் அனைத்தையும் தாங்கிப் பிடித்து, அரவணைத்து, அவைகளின் தாயாகத் திகழ்பவர் பூமித்தாய். இந்தப் பூவுலகில் வாழ்வதற்கான உரிமை நம்மனைவருக்கும் இருப்பதுபோல், அன்னை பூமிக்கும் உள்ளது. பூமி எனும் தாய், புனிதமானவர், பொறுமையானவர், வளம் தருபவர், உயிர் தருபவர். அதுமட்டுமல்ல, தன் கருவறையில் சுமக்கும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தந்து பாதுகாப்பவர். ஆனால் நாமோ, மண்ணையும், காற்றையும், நீரையும் களங்கப்படுத்தி, பூமித் தாயை காயப்படுத்தி வருகிறோம். இந்நிலையை மாற்றவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், பொங்கல் விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.