2017-01-12 16:14:00

தென் கொரிய தலத்திருஅவையில் 6,021 அருள்பணியாளர்கள்


சன.12,2017. தென் கொரிய ஆயர் பேரவை, இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முடிய, அந்நாட்டில், 6,021 பேர் அருள்பொழிவு பெற்ற அருள்பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆறாயிரத்திற்கும் அதிகமான அருள்பணியாளர்களில் 5,021 பேர் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்றும், 560 பேர் இறையடி சேர்ந்துள்ளனர் என்றும், 440 பேர் அருள்பணியாளர் நிலையைத் துறந்து வெளியேறியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

அந்நாட்டில் முதன்முதலாக அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டு, மறைசாட்சியாக உயிர் துறந்த புனித Andrea Kim அவர்களும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

மேலும், தென் கொரிய தலத்திருஅவை, பாப்பிறை மறைப்பணி கழகங்களுக்கு, 32 இலட்சத்து 30 ஆயிரம் டாலர் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. உலகின் ஏழை நாடுகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலத்திருஅவைகள் மற்றும், மறைப்பணித்தளங்களுக்கு உதவுவதற்கென, உரோமையிலுள்ள, பாப்பிறை மறைப்பணி கழகத் தலைமையகத்திற்கு இந்நிதியை வழங்கவுள்ளது தென் கொரிய தலத்திருஅவை.

ஆதாரம் : AsiaNews / UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.