2017-01-10 16:55:00

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கட்டும்


சன.10,2017. “உண்மையான அமைதியைக் கட்டியெழுப்புவதில், நம் நாடுகளும், நாடுகளின் மக்களும், ஒன்றிணைந்து உழைப்பதற்கு, அதிகமான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்பது என் நம்பிக்கை” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியின், சிசிலித் தீவிலுள்ள Caltagirone மறைமாவட்டத்தின் 200ம் ஆண்டு நிறைவு விழாவில், தனது சிறப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்கு, உரோம், புனித பவுல் பசிலிக்காவின் முன்னாள் தலைமைக்குரு, கர்தினால் Francesco Monterisi அவர்களை, நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த 200ம் ஆண்டு நிறைவுக்கொண்டாட்டங்கள், சனவரி 11, இப்புதனன்று இடம்பெறுகின்றன.

மேலும், 2018ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும், 15வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த செய்தியாளர்கள் கூட்டம், சனவரி, 13 வருகிற வெள்ளியன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இளையோர், விசுவாசம் மற்றும் அழைப்பைத் தேர்ந்துதெளிதல்” என்ற தலைப்பில் இந்த 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும்.

ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் Lorenzo Baldisseri, அம்மாமன்ற நேரடிப் பொதுச் செயலர் ஆயர் Fabio Fabene, இளையோரான Elvis Do Ceu Nicolaia Do Rosario, Federica Ceci ஆகியோர், இம்மாமன்றம் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில், விளக்குவார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.