2017-01-07 14:58:00

போரில் கொல்லப்பட்ட அருள்பணியாளர் குறித்த புலன் விசாரணைக்கு..


சன.07,2016. இலங்கையில், 1985ம் ஆண்டில், ஒரு கத்தோலிக்க அருள்பணியாளர் இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த, புலன் விசாரணையை மீண்டும் தொடங்குமாறு, அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், அரசை விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கையில், ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது, அருள்பணியாளர் மேரி பாஸ்டியன் (Mary Bastian) அவர்கள், Vankalai, புனித அன்னம்மா ஆலயத்தில், இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கையில், சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளுக்காக, பொதுப்படையாகக் குரல் கொடுத்துவந்த, மனித உரிமை ஆர்வலரான அருள்பணி பாஸ்டியன் அவர்கள், இராணுவத்தின் கொலைப் பட்டியிலில் ஒருவராக இருந்தார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அருள்பணி பாஸ்டியன் அவர்கள், கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புலன் விசாரணையை மீண்டும் தொடங்குமாறு, மனித உரிமை ஆர்வலர்கள், தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.