2017-01-05 15:42:00

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோருடன் திருத்தந்தை சந்திப்பு


சன.05,2017. 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 24, 26, மற்றும் அக்டோபர் 30 ஆகிய நாட்கள், மத்திய இத்தாலியப் பகுதியில், ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் குடும்பங்களையும், அப்பகுதிகளில் பணியாற்றும் அருள் பணியாளர்களையும், அப்பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்தார்.

Spoleto Norciaவின் பேராயர், Renato Boccardo அவர்கள் தலைமையில் வத்திக்கானுக்கு வருகை தந்த 5000த்திற்கும் அதிகமானோரை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வியாழன் காலை, 11.30 மணியளவில் திருத்தந்தை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார்.

நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உழைத்த தீயணைப்பு படையினர், முதலுதவிகள் செய்தோர், மற்றும் அப்பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டிருப்போர் ஆகிய அனைத்துப் பிரிவுகளின் பிரதிநிதிகளும் திருத்தந்தையைச் சந்திக்க வந்திருந்தனர்.

மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, Norciaவின் புனித Pellegrino (San Pellegrino di Norcia) என்ற ஊரில், பெரூஜியா பேராயர், கர்தினால் Gualtiero Bassetti அவர்கள், சனவரி 8, வருகிற ஞாயிறு, சிறப்பு திருப்பலியாற்றுவார் என்று உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.