2017-01-03 15:24:00

2016ல் 90,000 கிறிஸ்தவர்கள், விசுவாசத்திற்காக உயிரிழப்பு


சன.03,2017. 2016ம் ஆண்டில், உலகில், 90 ஆயிரம் கிறிஸ்தவர்கள், தங்களின் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர் என்று, ஒரு சமூகவியலாளர், வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.

புதிய மதங்கள் பற்றி ஆய்வு நடத்தும் ஒரு மையத்தின் நிர்வாகியான சமூகவியலாளர் Massimo Introvigne அவர்கள், 2016ம் ஆண்டில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களில், எழுபது விழுக்காட்டினர், ஆப்ரிக்காவில், இன மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறினார்.

மீதமுள்ள முப்பது விழுக்காட்டினர், பயங்கரவாதம், அரசின் அடக்குமுறை மற்றும், தங்களின் நகரங்கள் அழிக்கப்பட்டதால் இறந்தவர்கள் என்றும் கூறினார் Introvigne.

2016ம் ஆண்டில், ஒவ்வோர் ஆறு நிமிடத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில், ஏறக்குறைய  90 ஆயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், இவ்வெண்ணிக்கை 2014ம் ஆண்டைவிட குறைவு என்றும் கூறினார் Introvigne.

2014ம் ஆண்டில், ஒரு இலட்சத்து, ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றுரைத்த Introvigne அவர்கள், உலகில், கிறிஸ்தவர்களே, அதிகம் துன்புறுத்தப்படுபவர்கள் என்பதையும் தெரிவித்தார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.