2017-01-02 16:33:00

பகைமை, வன்முறைக்கு மறுப்பு, ஒப்புரவுக்கு ஆம்


சன.02,2017. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகமைக்கும் வன்முறைக்கும் மறுப்புச் சொல்லி, சகோதரத்துவத்துக்கும் ஒப்புரவுக்கும் ஆம் சொல்வோம் என அழைப்பு விடுத்தார்.

நல் வாழ்த்துக்கள் மற்றும் நம்பிக்கையின் இரவு, சோகம் தரும்வகையில், வன்முறையைக் கண்டுள்ளது என தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் துருக்கி மக்கள் அனைவருக்கும் தன் செப நெருக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

மனித சமூகத்திற்கு ஊறுவிளைவித்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகளையும், இரத்தம் சிந்தல்களையும் எதிர்த்துப் போரிட, நல்மனம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை முன்வைத்தார்.

இனி நாம் ஒவ்வொருவரும் இறைவனின் துணையோடு, ஒவ்வொரு நாளும் நன்மைகளையேச் செய்வதற்கு உதவும் வகையில் இவ்வாண்டு நமக்கு நல்லதொரு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.