2016-12-23 15:23:00

தெலுங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ பவன்


டிச.23,2016. தெலுங்கானா மாநில அரசு, விஜயவாடா நகரில் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், ஆலயங்கள் தாக்கப்படுவதையும், அவை அவமரியாதை செய்யப்படுவதையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக, உறுதியளித்தார்.

தெலுங்கானா மாநில அரசு, சமயச் சார்பற்றது என்பதால், தனது மாநிலத்தில், கிறிஸ்தவர்கள், பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டுமென்று கூறிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், மாநிலத்திலுள்ள அனைத்து இனப் பிரிவினர் மத்தியில், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு, தன்னை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

அம்மாநில கிறிஸ்தவ சபைகளுக்கென, நடத்தப்பட்ட இவ்விழாவில் பேசிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், Nagoleவில், 2 ஏக்கர் பரப்பில் கிறிஸ்தவ பவன் ஒன்று அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். இக்கிறிஸ்மஸ் விழாவில், பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், டிசம்பர் 27, வருகிற செவ்வாயன்று, அனைத்து கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Ind.Sec. / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.