2016-12-22 16:38:00

நபிகள் நாயகம் பிறந்தநாளும், கிறிஸ்து பிறந்தநாளும்


டிச.22,2016. இஸ்லாம்-கிறிஸ்தவ உறவை வளர்க்கும் முயற்சியாக, பாகிஸ்தானிலும், இத்தாலியிலும் இரு மதங்களின் பிரதிநிதிகள் கூடிவந்தனர் என்று பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

டிசம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட்ட நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாடி நபி விழாவன்று, லாகூர் பிரான்சிஸ்கன் சபையினர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம்-கிறிஸ்தவ கூட்டத்தில், குரான், விவிலியம் இவற்றிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டன.

லாகூர் தொழுகைக்கூடத்தின் தலைவர், Abdul Khabir Azad அவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம், பிரான்சிஸ்கன் சபை இல்லத்தின் சிற்றாலயத்தில் நடைபெற்றது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

மேலும், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, உரோம் நகரின் பாகிஸ்தான் தூதரகத்தில், உரோம் நகரில் பயிலும் அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், குரு மாணவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தூதர், Nadeem Riyyaz அவர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கிடையே, Cecil Chaudhry மற்றும் Iris Foundation எனப்படும் அறக்கட்டளை, லாகூர் நகரின் Youhanabad பகுதியில் வாழும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளை, கிறிஸ்மஸ் பரிசாக வழங்கியது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.