2016-12-22 14:46:00

திருவருகைக்காலச் சிந்தனை : உறவுகள்(லூக்:1,57-66)


திருமுழுக்கு யோவான் பிறந்த வேளையில், எலிசபெத்தின் சுற்றாரும் உறவினர்களும் அவரோடு சேர்ந்து மகிழ்வதைப் பார்க்கும்பொழுது, உறவினால் வருகின்ற மகிழ்வு நமக்குப் புரிகின்றது.

உண்மைதான், உறவுகள் இணையும்பொழுது உற்சாகம் பிறக்கின்றது;

உறவுகள் வலுப்பெறும்பொழுது, உன்னத ஆற்றல் மனதில் உதயமாகிறது; உறவுகள் மதிப்புப் பெறும்பொழுது, உடமைகள் மதிப்பு இழக்கின்றன; உறவுகள் கட்டப்படும்பொழுது, உணர்வுகள் மதிக்கப்படுகின்றன;

உறவுகள் வளர்க்கப்படும்பொழுது, உள்ளார்ந்த மகிழ்ச்சி பெருகுகின்றது.

ஆம், அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒருமனப்பாங்கோடு இருக்கும்பொழுது, அங்கு பேதமை இல்லை, ஏற்றத்தாழ்வு காணப்படுவதில்லை, கசப்புணர்வு தோன்றுவதில்லை, பகைமை நெருங்குவதில்லை.

எனவே, ஏதோ ஒரு சிறிய வார்த்தைக்காக முறித்துக்கொண்ட இரத்த உறவுகளைப் புதுப்பிப்போம்;

ஏதோ ஒரு சிறிய செயலுக்காக ஒதுக்கிய சுற்றத்தாரோடு ஓன்று சேர்வோம். ஏதோ ஒரு சிறிய மனக்கசப்பினால் விலக்கிய நண்பர்களை அணைத்துக்கொள்வோம்;

தவறான கண்ணோட்டத்தினால் பகைவர்கள் என்று நினைத்தவர்களை நண்பர்களாக்கிக்கொள்வோம்;

தவறான புரிதல்களால் எதிரிகள் என்று பார்த்தவர்களை தோழர்களாய் ஆக்கிக்கொள்வோம். மனதில் இருக்கும் வடுக்களை மாற்றுவோம். உறவின் மகிழ்ச்சியைப் பருகுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.