2016-12-07 15:02:00

திருவருகைக்காலச் சிந்தனை : அன்னை மரியாவின் இறைத்தேடல்


உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு வகையானத் தேடல்.

அரசியல்வாதி, பதவியைத் தேடிச் செல்கின்றான்.

வியாபாரி, இலாபத்தைத் தேடிச் செல்கின்றன்.

ஏழை, வசதியைத் தேடிச் செல்கின்றான்.

வசதிபடைத்தவன், நிம்மதியைத் தேடிச் செல்கின்றான்.

முட்டாள், அறிவைத் தேடிச் செல்கின்றான்.

அறிவாளி, ஞானத்தைத் தேடிச் செல்கிறான்.

தோல்வியடைந்தவன், வெற்றியைத் தேடிச் செல்கிறான்.

வெற்றிபெற்றவன், சாதனையைத் தேடிச் செல்கிறான்.

இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக, முதன்மையாக, முக்கியமானத் தேடல் ஓன்று இருக்கின்றது. அதுதான் இறைத்தேடல்.

எதைத் தேடினால், எதையும் தேடத் தேவையில்லையோ, அத்தகைய இறைத்தேடலுக்கு “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னை அர்ப்பணிக்கின்றார், அன்னை மரியா. இயேசுவைச் சுமந்தது மட்டுமின்றி, அவரது வார்த்தைகளையும், மதிப்பீடுகளையும், வாழ்ந்து காட்டியவர், அன்னை மரியா.

தன் ஒரே மகனையும் இவ்வுலகிற்கு அளிக்கின்ற தியாகத் தாய், அன்னை மரியா. அன்னை மரியாவைப் போலவே, இறைத்தேடல் மேற்கொண்டு, இறைவிருப்பத்தை நிறைவேற்றுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.