2016-12-05 14:54:00

திருவருகைக்காலச் சிந்தனை : தேடிக் கண்டடைதல்


காணாமற் போவதும், தொலைந்து விடுவதும் அன்றாட வாழ்வின் எதார்த்தம்தான்.

ஆனால், அதனைத் தேடி கண்டடைவதில்தான் வாழ்வின் சுவாரசியம் இருக்கின்றது.

சிலர், உடனே தேடி, கண்டுபிடித்து விடுகின்றனர்,

சிலர், தேடாமலேயே விட்டுவிடுகினறனர்.

சிலர், தேடி, தேடி, சோர்ந்து விடுகின்றனர்,

சிலர், தேடிக்கொண்டே இருக்கின்றனர்.

சிலர், தேவையின் பொருட்டு தேடுகின்றனர்,

சிலர், அதன் மதிப்பின் பொருட்டு தேடுகின்றனர்.

திருவருகைகாலம், காணாமற்போன, தொலைத்த அனைத்தையும் தேடிக் கண்டுபிடிக்க அழைப்பு விடுக்கின்றது.

ஆம், தவறான வழிகாட்டலால் நாம் தொலைத்த நேரிய வாழ்வு,

சுயநல வேட்கையால் நாம் தொலைத்த சமத்துவம், சகோதரத்துவம்,

மனத்தாங்கலால் நாம் தொலைத்த உறவுகள், நட்புகள்,

பிரச்சனைகளைத் தவிர்க்க நாம் தொலைத்த உண்மைகள் நியாயங்கள்,

தவறான சித்தாந்தங்களாலும், தத்துவங்களாலும், நாம் தொலைத்த செப வாழ்வு, தெய்வபக்தி... இன்னும் எத்தனையோ எத்தனையோ...

தேடுவோமா? கண்டடைந்து ஆனந்தம் கொள்வோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.