2016-12-03 15:14:00

சிறுமிகள் முன்னேற்றத்திற்காக உழைத்த அ.சகோதரி கொலை


டிச.03,2016. இவ்வாரத்தில், காங்கோ சனநாயகக் குடியரசில் கொலை செய்யப்பட்டுள்ள அருள்சகோதரி Clara Agano Kahambu அவர்கள், சிறுமிகளின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர் என்று, கின்ஷாசா உயர்மறைமாவட்டம் கூறியுள்ளது.

பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரி Kahambu அவர்கள், அந்நாட்டின் புக்காவு, மாட்டர் தேய் பங்குத்தளத்தில், கடந்த நவம்பர் 29ம் தேதி கொலைசெய்யப்பட்டார்.

இச்சகோதரி, தனது அலுவலகத்தில், ஒரு மாணவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அச்சகோதரியின் பள்ளியில், தனது மகளைச் சேர்ப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறிய ஒரு மனிதர், உடனடியாக, அச்சகோதரியின் கழுத்தை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

நாற்பது வயது நிரம்பிய அருள்சகோதரி Kahambu அவர்கள், பெண்களின் உரிமைக்காகப் போராடி வந்தவர் என்றும், அந்நாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடி வந்தவர்களில் ஒருவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.