2016-11-30 14:49:00

திருவருகைக்காலம் - கிறிஸ்தவ விழுமியங்களில் நம் உறவுகள்


கடந்த வருடம், ஒரு பத்திரி செய்தி இவ்வாறாக வெளிவந்தது: சென்னை வெள்ளம், சிலரை மாமனிதர்களாகவும், பலரை, மனிதர்களாகவும் உருமாற்றியது என்று. அடுக்கு மாடி வசிப்போர், அடுத்தவர்களை, முதன்முதலாக, தங்கள் மேல் மாடியில்தான் சந்தித்தார்கள். உணவுக்காகக் கையேந்தும்போது, தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன்  தகுதி, சமுதாய அந்தஸ்து, என்ற குறுகிய மனப்பான்மை கொண்டு, தாங்களாக உருவாக்கிய சுவர்கள் எல்லாம், அன்று வெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்டன. வங்கிக் கணக்கும், வைப்பு அட்டையும் சோறு தரவில்லை. சமத்துவம், சகோதரத்துவம்,சாதி சமயம் பார்க்காத, மனித நேயம் மட்டும் அங்கே, விஸ்வரூபம் எடுத்து, அனைவரையும் கரை சேர்த்தது. இறையாட்சியின் விழுமியங்களோடு நம் வாழ்வு பயணப்படும்போது, நமது வாழ்க்கை, பாறை மேல் கட்டிய வீட்டிற்கு சமம். எந்த வெள்ளத்தாலும் அழிக்க முடியாது. நமது வாழ்க்கை எனும் வீடு, எதன் மேல் கட்டப்பட்டிருக்கிறது? இறைதிருவுளத்தின்படி, அனைவரும் இறைச்சமுதாயம் என்றிணைந்து, இறையாட்சியின் விழுமியங்களில், நமது பந்தங்கள் அமையட்டும். விழிப்புடன் நம்மை மாற்றியமைக்க, இத்திருவருகைக்காலம் நம்மை அழைக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.