2016-11-25 15:29:00

மரண தண்டனைக்கு எதிராக தென் கொரிய ஆயர்கள்


நவ.25,2016. தென் கொரிய ஆயர்கள், மரண தண்டனைக்கு எதிரான, தங்களின் எதிர்ப்பையும், அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்.

தென் கொரிய ஆயர்கள் பேரவையின், மரண தண்டனைக்கு எதிரான பணிக்குழு, ஊடகம், கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் வழியாக, மரண தண்டனைக்கு எதிரான ஆயர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, மரண தண்டனையை ஒழிக்கும் நடவடிக்கைகளை ஆற்றி வருகின்றது.

மரண தண்டனைக்கு எதிரான உலக நாள், நவம்பர் 30, வருகிற புதனன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அத்தண்டனைக்கெதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளனர், தென் கொரிய ஆயர்கள்.

தென் கொரியாவில், 1997ம் ஆண்டிலிருந்து மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லையெனினும், அந்நாட்டில், 2014ம் ஆண்டின் இறுதியில், குறைந்தது 61 மரண தண்டனை கைதிகள் இருந்தனர். 2015ம் ஆண்டில், மேலும் ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று UCA செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.