2016-11-25 14:50:00

இது இரக்கத்தின் காலம் : ஏழையில் வாழும் இறைவனுக்கு உணவில்லை!


அன்று அந்தோனியின் தாத்தா இறந்த முதலாமாண்டு நிறைவு. வீட்டிற்கு ஓர் ஏழையை அழைத்து, அவருக்கு விதவிதமான விருந்து படைக்கப்பட்டது. தாத்தா விரும்பி உண்ணும் காய்கறிகள், மீன் கருவாடு, காடைகறி என பலவிதமாக விருந்து படைக்கப்பட்டிருந்தது.  வந்தவரும், இறந்துபோன ஆன்மாவுக்காக செபம் சொல்லிவிட்டு நன்றாக வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுச் சென்றார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த 6 வயது அந்தோனி, தன் தாயிடம், 'ஏனம்மா இன்றைக்கு இவ்வளவு தடபுடலாக விருந்து?' என்று கேட்டான். ‘வேறொன்றுமில்லை, இன்று உன் தாத்தா இறந்த முதலாமாண்டு. அதனால் அவருக்கு கொடுப்பதாக நினைத்து, தாத்தாவுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து, இந்த ஏழைக்குக் கொடுத்தோம்' என்றார் தாய். 'அது சரியம்மா, நம்ம தாத்தாவுக்கென்று வயிறு நிறைய தினமும் சோறு போட்டால் என்ன? ஆண்டுக்கு ஒருமுறை சோறுபோட்டால், மற்ற நாட்களுக்கு தாத்தா எங்கு போவார்? ஒவ்வொரு நாளும் தாத்தாவுக்குக் கொடுப்பதாக எண்ணி ஒவ்வொரு ஏழையாக தினமும் சோறு கொடுத்தால் என்ன?' என அந்த ஏழையில் தன் தாத்தாவைக் கண்டு கேட்டான் சிறுவன் அந்தோனி. தாய்க்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.