2016-11-23 15:39:00

ரோஹிங்கியா இனத்தவர் தாக்குதலுக்கு பங்களாதேஷ் கண்டனம்


நவ.23,2016. மியான்மார் நாட்டில், அனைத்து மதத்தினரும் வாழ்வதற்கு சம உரிமை பெற்றுள்ளனர் என்று, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி, அமைதி அவைத் தலைவர், ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ அவர்கள் கூறினார்.

மியான்மார் அரசு, ரோஹிங்கியா இனத்தைச் சார்ந்த இஸ்லாமியரைத் தாக்கிவருவது குறித்து, பங்களாதேஷின் அனைத்து மதத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட வேளையில், Rajshahi மறைமாவட்ட ஆயர் ரொசாரியோ அவர்கள், ஆசிய செய்தியிடம் இவ்வாறு கூறினார்.

மியான்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்துவரும் கொடுமைகளுக்கு எதிராக ஐ.நா. அவையும், ஏனைய உலக நாடுகளும் குரல் எழுப்பாமல் இருப்பது குறித்து, மதத் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.

மியான்மார் கொடுமைகளிலிருந்து தப்பித்து, பங்களாதேஷ் நாட்டிற்குள் மக்கள் அடைக்கலம் புகுந்து வந்தனர் என்பதும், அவர்களின் வருகையை பங்களாதேஷ் அரசு இச்செவ்வாயன்று தடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.