2016-11-21 16:59:00

உலகில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை


நவ.21,2016. உலகில் உள்ள மொத்த குழந்தைகளுள் மூன்றில் ஒரு பகுதியினர், பள்ளிக்கேச் செல்வதில்லை என அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வளரும் நாடுகளில் இந்த நிலை காணப்படுவதாக கவலையை வெளியிடும் Child fund Alliance என்ற குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, ஆப்கானிஸ்தானில் பத்துக்கு ஒன்பதுபேர் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை இருக்கிறது எனவும் தெரிவிக்கிறது.

UNICEF எனும் ஐ. நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பின் கூற்றுப்படி, உலகில் 5 கோடியே 90 இலடசம் குழந்தைகள், ஆரம்பக் கல்விக் கூடங்களுக்குச் செல்லாமலேயே வாழ்கின்றனர்.

ILO எனும் உலக தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, 16 கோடியே 80 இலடசம் குழந்தைகளும் இளவயதினரும் கட்டாயமாக பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும் 2030ம் ஆண்டிற்குள் துவக்கக் கல்வியை வழங்கவேண்டும் என ஐ.நா. அங்கத்தினர் நாடுகள் 2015ம் ஆண்டில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.