2016-11-21 16:23:00

இது இரக்கத்தின் காலம்:பிறருக்கு இன்னல் தருவதைத் தவிர்ப்போம்


மகத நாட்டில் சிவா எனும் தச்சர் வாழ்ந்து வந்தார். அவர், அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்துக் கொண்டிருந்தார். மாலையில், அவர், தனது வேலை முடியாமல் இருந்ததால், தான் அறுத்து கொண்டிருந்த மரத்தில், ஆப்பு ஒன்றை சொருகி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். அப்போது அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு, சிவா பாதி அறுத்துவிட்டுச் சென்ற மரத்தின் மீது விளையாடியது. சிவா, சொருகி வைத்த ஆப்பையும் கவனித்தது. அப்போது, அம்மரத்தின் மீது அமர்ந்துகொண்டு, அந்த ஆப்பை, கஷ்டப்பட்டு அசைத்து ஆட்டிப் பிடுங்கியது. அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக்கொண்டன. இரவு நெருங்கும் நேரம். ஆகவே ஒருவரும் உதவிசெய்ய வரவில்லை. எனவே, கால்களை எடுக்க முடியாமல், இறந்து போனது அந்தக் குரங்கு.

தனக்கு ஒத்துவராத காரியங்களைச் செய்தால், இந்தக் குரங்கின் கதிதான் நமக்கும் நேரிடும். பிறர் காரியங்களில் தலையிட்டு, பிறருக்குத் துன்பம் தருவது, இரக்கத்திற்குப் புறம்பான செயலாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.