2016-11-14 17:10:00

மத சித்ரவதை என்பது வன்முறையை மட்டும் குறிப்பிடவில்லை


நவ.,14,2016. பிலிப்பீன்ஸ் நாடு கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக  இருக்கின்றபோதிலும், அங்கும் மத அடிப்படையில் சித்ரவதைகள் இடம்பெறுவதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.

மத சித்ரவதைகள் என்பது வன்முறை நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடவில்லை என்ற பேராயர் சாக்ரட்டீஸ் வில்லேகாஸ் அவர்கள், பொய்யை உண்மை போலவும், உண்மையை பொய்யாகவும் சமூகத்தொடர்பு சாதனங்களில் காட்டுவதும் மதச் சித்ரவதையே என்றார்.

மனித வாழ்வுக்காகவும், மாண்புக்காகவும் குரல் எழுப்பும்போதெல்லாம், பிலிப்பீன்ஸ் திருஅவையை சமூக எதிரியாக சமூகத் தொடர்புச் சாதனங்களில் சித்தரிப்பது, ஒருவித மத சித்ரவதையே எனவும் கூறினார் பேராயர்.

சமூகத்தின் ஒழுக்கரீதி திசைகாட்டியாக செயல்படும் தலத்திருஅவை எப்போதும் தாக்கப்பட்டே வருகின்றது என்ற கவலையை வெளியிட்டார் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரட்டீஸ் வில்லேகாஸ். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.