2016-11-10 15:52:00

மக்களைச் சந்தித்த ஓர் ஆன்மீக மேய்ப்பரின் வார்த்தைகள்


நவ.10,2016. நடந்தே சென்று மக்களைச் சந்தித்த ஓர் ஆன்மீக மேய்ப்பரின் வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயராக பணியாற்றிய வேளையில் வழங்கிய மறையுரைகளில் வெளிப்பட்டன என்று, திருப்பீட செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உரோம் தலைமை இல்லத்தில் கூடியிருந்த இயேசு சபையினரிடம் கூறினார்.

இயேசு சபையினரின் 36வது பொதுப் பேரவையில், நவம்பர் 10, இவ்வியாழன் மதியம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரெஸ் பேராயராக பணியாற்றிய வேளையில், அவர் வழங்கிய மறையுரைகள் மற்றும் ஏனைய உரைகளின் தொகுப்பு, "உங்கள் கண்களில் உள்ள என் வார்த்தை, புவனேஸ் ஆயிரஸ் மறையுரைகளும், ஏனைய உரைகளும்" என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

இந்நூலை வெளியிட்டுப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் தலைமைப்பணியின் துவக்கத்திலிருந்தே சக்தி மிகுந்த சொற்களாலும், செயல்களாலும் உலகினர் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அவ்வாறு உருவாக்கியச் சோதனைக்கூடம் அவர் பணியாற்றிய புவனஸ் அயிரெஸ் உயர் மறைமாவட்டம் என்பதை இந்நூலில் உணர்கிறோம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நூல் வெளிவருவதற்கு அடித்தளமிட்ட, இயேசு சபை அருள்பணி ஸ்பதாரோ அவர்கள், திருத்தந்தையை மையப்படுத்தி வெளியிட்டுள்ள ஏனைய நூல்களைக் குறித்தும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் அறிமுக உரையில் எடுத்துரைத்தார்.

இயேசு சபையினருக்கு உரிய தேர்ந்து தெளிதலையும், தனக்கே உரிய இரக்கத்தையும் தன் தலைமைப்பணியில் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரெஸ் பேராயராகப் பணியாற்றிய வேளையில், உலக வாழ்வின் எதார்த்தங்களுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை, அவரது மறையுரைகள் தெளிவாக்குகின்றன என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நூலில் காணப்படும் இறுதி மறையுரையில், 2013ம் ஆண்டு, மார்ச் 28 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், கர்தினால் பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை தேர்தலுக்குப் பின் மீண்டும் புவனஸ் அயிரஸ் திரும்பிச்சென்று, திருத்தைலம் அர்ச்சிக்கும் திருப்பலியை மறைமாவட்டப் பேராலயத்தில் ஆற்றுவதற்கு அவர் தயாராக இருந்தார் எ

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.