2016-11-08 14:10:00

இது இரக்கத்தின் காலம் : ஒளியின் மக்கள் பேறுபெற்றோர்


புத்தர், அறிவொளி பெற்றபின் ஒருநாள் வீதி வழியே நடந்து சென்றார். அவருக்கு எதிராக வந்த ஓர் எளிய தொழிலாளி, புத்தரின் முகத்தில் வீசிய ஒளியைக் கண்டு அவரிடம் சென்று, "ஐயா, நீங்கள் யார்? உங்கள் முகத்தில் வீசும் ஒளியைக் கொண்டு பார்த்தால், நீங்கள் ஒரு வான தூதராகவோ, கடவுளாகவோ இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்று கேட்டார்.

புத்தர் அவரிடம் அமைதியாக, "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று கூறினார்.

"இல்லையென்றால், நீங்கள் ஒரு மந்திரவாதியாக இருக்கவேண்டும். உங்களிடம் வீசும் ஒளியை, சாதாரண மனிதனாகிய நானே உணர்கிறேனே" என்று சொன்னார், தொழிலாளி.

புத்தர் அவரிடம், "என்னைப்பற்றியும் இவ்வுலகைப்பற்றியும் புரிந்துகொண்ட ஒரு சாதாரண மனிதன் நான். அவ்வளவுதான். இதை நான் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, அவர்கள் யாரும் நம்ப மறுக்கிறார்கள்" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றார்.

தன்னைப்பற்றியும், உலகைப்பற்றியும் தெளிவடைந்தோர் பேறுபெற்றோர், அவர்கள் ஒளியின் மக்கள் எனப்படுவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.