2016-10-29 16:00:00

2020ல் வன உயிரினங்களில் மூன்றில் 2 பங்கு அழியும் அபாயம்


அக்.29,2016. உலக அளவில், வன உயிரினங்கள், 1970ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 58 விழுக்காடு வரை அழிந்துவிட்டதாகவும், இந்நிலை நீடித்தால், 2020ஆம் ஆண்டிற்குள், முதுகெலும்பு உள்ள உயிரினங்களில், மூன்றில் இரண்டு பகுதி அழியக்கூடும் எனவும், ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. .

இலண்டன் விலங்கியல் கழகமும் (ZSL), உலக இயற்கை பாதுகாப்பு நிதி அமைப்பும் (WWF) இணைந்து ஆய்வு நடத்தி, வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏரிகள், ஆறுகள் மற்றும் ஈரமண் பகுதிகளில் வாழும் விலங்குகள், அழியும் ஆபத்தை, அதிகம் எதிர்கொள்கின்றன என்று தெரிகிறது.

நல்ல தண்ணீரில் வாழும் உயிரினங்கள் மட்டும், 1970ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை 81 விழுக்காடு வரை அழிந்துவிட்டதாக, WWF அமைப்பின் Mike Barrett அவர்கள் தெரிவித்தார்.

பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், நகர்வன, நில நீர்வாழ் உயிரினங்கள் என, கடந்த நாற்பது ஆண்டுகளில், 3,700 வகையான உயிரினங்கள் பற்றி நடத்தப்பட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் மக்கள் தொகை, காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, தொழிற்சாலை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், வன உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.