2016-10-21 15:34:00

வடகிழக்கு இந்தியாவில், இறையழைத்தல்கள் அதிகரிப்பு


அக்.21,2016. வடகிழக்கு இந்தியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும், இறையழைத்தல்களும் அதிகரித்து வருகின்றன என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

வடகிழக்கு இந்தியாவின் 120 வருட கத்தோலிக்க மறைப்பணி பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட, குவாஹாட்டி முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்கள், வடகிழக்கு இந்தியாவில், கத்தோலிக்கம், இளமையான சமூகமாக இருந்தாலும், அது பலவழிகளில் வளர்ந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

வடகிழக்கு இந்தியாவில், கத்தோலிக்கரின் தலைமைத்துவம், வெளிநாட்டவரிலிருந்து இந்தியரின் கைக்கு வந்து, தற்போது, அது மண்ணின் புதல்வர்களிடம் சென்றுள்ளது என்றும் கூறினார் பேராயர் மேனம்பரம்பில்.

இந்தியாவில், வடகிழக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள், பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறார்கள் என்றும், 120 வருட வரலாற்றைக் கொண்ட இளம் கத்தோலிக்க சமூகத்தில், தற்போது, ஏறக்குறைய இருபது இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் பகிர்ந்துகொண்டார் பேராயர் மேனம்பரம்பில்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.