2016-10-21 15:21:00

அன்னை தெரேசா இந்தியாவின் இதயத்தை வென்றவர்


அக்.21,2016. கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்களுக்கு, மரியாதை செலுத்திய அதேவேளை, சமய நோக்கில் நடத்தப்படும் வன்முறையிலிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளார் இந்திய மத்திய அமைச்சர் ஒருவர்.

அன்னை தெரேசா அவர்கள், புனிதராக உயர்த்தப்பட்ட நிகழ்வை, புதுடெல்லியில், கத்தோலிக்கத் தலைவர்கள் சிறப்பித்த நிகழ்வில், கலந்துகொண்டு பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், இந்திய நாட்டின் சார்பில், அன்னை தெரேசா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று கூறினார்.

இந்தியாவில் சமயப் பாகுபாட்டிற்கு இடமில்லை என்றும், இந்தியா, சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகம், சகிப்புத்தன்மையின்றி, பல்வேறு மத மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து வாழ்வது இயலாத காரியம் என்றும், சகிப்புத்தன்மையின்றி, அமைதியை அடைய முடியாது என்றும் கூறினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அன்னை தெரேசா, அனைத்து இந்தியர்களுக்கும் அன்னை, இவர், இந்தியாவின் இதயத்தை வென்றவர் என்று மேலும் கூறினார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இப்புதனன்று நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியே உட்பட, ஏறத்தாழ அறுபது ஆயர்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், 2.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 14 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.