2016-10-19 15:15:00

2030ம் ஆண்டு இலக்குகள் குறித்து திருப்பீடத்தின் கருத்துக்கள்


அக்.19,2016. 2030ம் ஆண்டுக்குள் உலகம் அடையவேண்டிய நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள் குறித்து திருப்பீடம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய ஒரு மடல், ஐ.நா. பொது அவையின் வலைத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான மனித முன்னேற்றத்தை மையப்படுத்தி, 2030ம் ஆண்டுக்குள், தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நாடுகள் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளாக திருப்பீடம் தொகுத்துள்ள பரிந்துரைகள், இம்மடலில் வெளியாகியுள்ளன.

வறியோர் தங்கள் இலக்குகளைத் தீர்மானம் செய்வதற்குரிய மதிப்பை வழங்குதல், மனிதர்களை மேம்படுத்தும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல், மோதல்களை, உரையாடல்கள் வழியே தீர்க்க முயல்தல் போன்ற பரிந்துரைகளை திருப்பீடம் முன்வைத்துள்ளது.

2030ம் ஆண்டுக்குள் இவ்வுலகம் காணவேண்டிய முன்னேற்றத்தில், மனித மாண்பு மையப்படுத்தப்படுதல், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குதல் போன்றவை முக்கியத்துவம் பெறவேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.