2016-10-13 15:06:00

இது இரக்கத்தின் காலம் : இரவு முடிந்து பகல் வருவதை எப்படி..


ஆசிரமக் குரு ஒருவர், தன் சீடர்களிடம், இரவு முடிந்து பகல் வருவதை எவ்வாறு தெரிந்துகொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒரு சீடர், தூரத்தில் ஒரு மிருகம் வரும்போது, அது குதிரையா? மாடா? என்று நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்போது என்றார். அது சரியான பதில் இல்லை என்றார் குரு. பின்னர் மற்றொரு சீடர், தூரத்தில் ஒரு மரத்தைப் பார்க்கும்போது, அது மா மரமா? புளிய மரமா? என்று தெரியும்போது என்றார். இதுவும் சரியான பதில் இல்லை என்றார் குரு. சரி, எப்படித்தான் தெரிந்துகொள்வது? என்று சீடர்கள் கேட்டனர். குரு சொன்னார் : நீங்கள் ஓர் ஆணைச் சந்திக்கும்போது, அவருடைய முகத்தில் சகோதரன் என்ற உடன்பிறந்த உணர்வு தெரியும்போது! ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது, அவருடைய முகத்தில் சகோதரி என்ற உடன்பிறந்த உணர்வு தெரியும்போது! இது உங்களுக்கு முடியாத பட்சத்தில், சூரியன் எவ்வளவுதான் சுடர்விட்டாலும், அது இரவுதான்! என்று(அ.பணி அந்தோனி டி மெல்லோ சே.ச.). நாம் சந்திக்கும் அனைவரும், நம் உடன் பிறப்புகளாகத் தெரிந்துவிட்டால், சமுதாயத்தில், குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுமா? அன்பும், மனித நேயமும் அல்லவா பெருகும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.