2016-10-07 16:10:00

பேதுரு பசிலிக்காவில் இயேசு சபை 36வது பேரவைப் பிரதிநிதிகள்


அக்.07,2016. இயேசு சபையினரின் 36வது பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் 215 பிரதிநிதிகளும், அக்டோபர் 7, இவ்வெள்ளி காலை 7 மணிக்கு, இயேசு சபை தலைமை இல்லத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனித கதவு வழியே ஆலயத்தில் நுழைந்து, சிறப்பான செபங்களையும், திருப்பலியையும் நிறைவேற்றினர்.

தற்போது நடைபெறும் பேரவைக்காக, குறிப்பாக, அடுத்த உலகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இறைவன் தங்களை வழிநடத்த வேண்டும் என்று பேரவையில் கலந்துகொள்ளும் அனைத்து பிரதிநிதிகளும் செபித்தனர்.

இதைத் தொடர்ந்து, புனித பேதுரு தலைமையிருக்கையையொட்டி அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், இப்பேரவைப் பிரதிநிதிகளில் மூத்தவரான 76 வயது நிறைந்த, பிலிப்பீன்ஸ் அருள் பணியாளர் Bienvenido Nebres அவர்கள் தலைமையில், கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தன் 80வது வயதில், தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் அருள்பணி அடால்ஃபோ நிக்கோலஸ் அவர்களுக்குப் பதிலாக, இயேசு சபையின் 31வது உலகத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, உரோம் நகரில் கூடிவந்துள்ள பேரவைப் பிரதிநிதிகள், 66 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.