2016-10-07 16:27:00

இந்தோனேசிய இளையோர் தினத்திற்கு முஸ்லிம் கைவினைஞர் சிலுவை


அக்.07,2016. இந்தோனேசியாவில் கடந்த ஆறு நாள்களாக நடைபெற்ற இரண்டாவது தேசிய இளையோர் தினம், இவ்வியாழன் இரவு, இந்தோனேசியாவின் 18 ஆயர்களும் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத்திருப்பலியோடு நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த இளையோர் தினத்தின் முக்கிய அடையாளமாக இருந்த சிலுவை, ஒரு முஸ்லிம் கைவினைஞரால் செய்யப்பட்டது. மூங்கில் மற்றும் பிரம்பினால் செய்யப்பட்ட இச்சிலுவையை, முஸ்லிம் கைவினைஞர் செய்திருப்பது, பன்மைத்தன்மையில் ஒன்றிப்பையும், பல்வேறு மதத்தவர் மத்தியில் நல்லிணக்கத்தையும் காட்டுகின்றது என்று பீதேஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

மேலும், "இந்தோனேசிய பன்முகச் சமுதாயத்தின் நடுவில், நற்செய்தியின் மகிழ்வு" என்ற இந்த இளையோர் தினத்தின் விருதுவாக்கிற்கு ஒத்திணங்கிச் செல்வதாகவும், இச்சிலுவை அமைந்துள்ளது என்றும் அச்செய்தி நிறுவனம் கூறுகின்றது.

இந்தோனேசியாவின், மனாடோ மறைமாவட்டத்தில், அக்டோபர் முதல் தேதி தொடங்கிய இந்த 2வது இந்தோனேசிய இளையோர் நாள் நிகழ்வுகள், அக்டோபர் 6, இவ்வியாழனன்று நிறைவுக்கு வந்தன. இதில், இந்தோனேசியாவின் 37 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,600க்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.