2016-10-01 15:14:00

யூத மத விழாக்களுக்கு திருத்தந்தை வாழ்த்து


அக்.01,2016. வருகின்ற நாள்களில், யூதர்கள் சிறப்பிக்கவிருக்கும் மூன்று விழாக்களுக்கென, உரோம் யூதச் சமூகத்திற்கும், உலகெங்கும் வாழும் யூதர்களுக்குமென வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் யூதமதத் தலைவர் ரபி ரிக்கார்தோ தி செஞ்ஞி அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், நிகழவிருக்கும் விழாக்கள், ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரட்டும் என வாழ்த்தியுள்ளார்.

நம்மிடையே இனிதான நட்பை வலுப்படுத்தவும், அமைதியை ஊக்குவிக்கவும், தணியாத ஆவலை இறைவன் வழங்குவாராக என்றும் வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற நாள்களில், யூதர்கள், தங்களின் புத்தாண்டாகிய Rosh Ha-Shanah 5777, Yom Kippur, கூடாரத் திருவிழா ஆகியவற்றைச் சிறப்பிக்கின்றனர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.