2016-09-28 16:45:00

மும்பையில் தெருவோரக் குழந்தைகளுக்கென காபிக்கடை


தெருவோரக் குழந்தையாக வாழ்ந்த ஒருவர், மும்பை மாநகரில் ஏனையத் தெருவோரக் குழந்தைகளுக்கென காபிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்று, பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

அமீன் ஷேக் (Amin Sheik) என்ற 30 வயது இளைஞர், Bombay to Barcelona என்ற பெயரில், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்துள்ள இந்தக் கடை, ஓர் உணவகமாகவும், நூல் நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது என்றும், இங்கு மலிவான விலையில் காபி, டீ ஆகியவை கிடைக்கின்றன என்றும் கூறப்படுகின்றன.

மேலும், இக்கடையில் பணியாற்றும் பலர், தெருவோரக் குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதும், அமீன் உட்பட, இவர்கள் அனைவரும், இயேசு சபையினர் நடத்திவரும் ஸ்நேகசதன் (Snehasadan) என்ற இல்லத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, மும்பை மாநகரில் 37,059 தெருவோரக் குழந்தைகள் உள்ளனர் என்றும், இவர்களில் ஐந்தில் இருவர், பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.