2016-09-28 16:49:00

'Amoris Laetitia' திருத்தூது அறிவுரை, ஊக்குவிக்கும் சக்தி


செப்.28,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'Amoris Laetitia'அதாவது, 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை, மக்களுக்கு ஓர் அறிவுரையாக மட்டுமல்ல, மாறாக, குடும்பங்களுக்கு வழிகாட்டியாகவும், ஊக்குவிக்கும் சக்தியாகவும் அமைந்துள்ளது என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

2016ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, இந்த அறிவுரை மடல் வெளியானது முதல், குடும்பங்கள், பொதுநிலையினரின் தலைவர்கள், மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் இம்மடலை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

'அன்பின் மகிழ்வு' என்ற அறிவுரை வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, பல்வேறு நிலைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதென, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.