2016-09-20 17:47:00

இலங்கையின் அமைதி முயற்சிகளுக்குத் தடையாக புத்தர் சிலைகள்


செப்.20,2016. இலங்கையின் வடபகுதியில் புத்த மதத்தினர் வாழாத பகுதிகளிலும் புத்தர் சிலையை நிறுவிவரும் அண்மையப் போக்குகள், நாட்டின் அமைதி முயற்சிகளுக்குத் தடையாக உள்ளதென, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின், நீதி மற்றும் அமைதி அவை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், புத்தர் சிலையை நிறுவுவது, நாட்டின் ஒப்புரவுக்கானப் பாதையில் இடையூறாக நிற்கும் 10 விடயங்களில் ஒன்று என்று, யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்ட அறிக்கை கூறுவதாக, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

இந்து கோவில்களுக்கு அருகிலேயே இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் உதவியோடு, புத்தர் சிலைகள் நிறுவப்படுவது, அப்பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்கத் தவறுவதாக உள்ளது எனவும் கவலையை வெளியிட்டுள்ளது, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் நீதி, மற்றும் அமைதி அவையின் அறிக்கை.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.