2016-09-16 16:53:00

நில அபகரிப்பு குற்றங்களை விசாரிக்க உள்ள பன்னாட்டு நீதிமன்றம்


செப்.16,2016. போர் காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்துவந்த பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், அமைதிக் காலத்தின்போது நிகழ்த்தப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு, மற்றும், நில-அபகரிப்பு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, அவற்றை தனது அதிகார வரம்பிற்குள் கொணர்ந்து, விசாரணைகள் நடத்த திட்டமிட்டுள்ளது .

இத்தகையக் குற்றங்களை ஒரு பன்னாட்டு நீதிமன்றம், தன் அதிகார வரம்பிற்குக் கீழ் கொண்டு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பதால், இந்த முடிவை வரவேற்கும் ஆதரவாளர்கள் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

தற்போது தனியார்துறையின் முதலீட்டாளர்கள் ஏழை நாடுகளில் இரகசியமாக நிலங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை உள்ளது.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த முயற்சி பலனளிப்பதற்கு, இந்த நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டுள்ள நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும், அப்போதுதான், இது போன்ற செயல்களை தடுக்கும் ஒரு வழியாக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் செயல்பட முடியும் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.