2016-09-14 16:55:00

கர்தினால்களின் ஆலோசனைக் குழு மேற்கொண்ட 16வது சந்திப்பு


செப்.14,2016. செப்டம்பர் 12, இத்திங்கள் முதல், 14, இப்புதன் முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால்களின் ஆலோசனைக் குழு மேற்கொண்ட 16வது சந்திப்பு குறித்து, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், Greg Burke அவர்கள், செய்தியாளர்களிடம் விவரங்களை வழங்கினார்.

ஒன்பது பேர் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினரான, கர்தினால் Laurent Monsengwo Pasinya அவர்கள், கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று Burke அவர்கள் தெரிவித்தார்.

திருப்பீடத்தில் இயங்கிவரும் பல்வேறு அவைகளின் பணிகள் குறித்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்றும், குறிப்பாக, ஆயர்கள், அருள் பணியாளர்கள், கத்தோலிக்கக் கல்வி ஆகிய மூன்று பேராயங்களின் பணிகள் குறித்து விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், செய்தித் தொடர்பாளர் Burke அவர்கள் கூறினார்.

C 9 என்றழைக்கப்படும் கர்தினால்களின் ஆலோசனைக்குழு, டிசம்பர் 12,13,14 ஆகிய தேதிகளில் வத்திக்கானில் அடுத்தமுறை கூடும் என்று Burke அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.