2016-09-13 16:40:00

சிரியாவின் இழப்புக்கள், உலகிற்கும் பேரிழப்பாகும் ஆபத்து


செப்.13,2016. சிரியாவில் மோதல்கள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் இழப்புக்கள், அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலக சமுதாயம் முழுவதற்கும் பேரிழப்பாக முடியும் என கவலையை வெளியிட்டுள்ளது  Pax Christi அமைப்பு.

சிரியாவில் மோதல்களை நிறுத்துவது குறித்து இரஷ்யாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இசைவு குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட இந்த கத்தோலிக்க அமைப்பு, மோதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டும் போதாது, அப்பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்தது.

ஜெனீவாவின் அமைதி பேச்சுவார்த்தைகள், ஒரு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் எனவும் உரைத்தது Pax Christi அமைப்பு.

உதவி அமைப்புகளின் கணிப்புப்படி, சிரியாவின் 1 கோடியே 35 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.