2016-09-13 16:32:00

குறைந்த செலவில் வாழ வசதியுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்


செப்.13,2016. உலகளாவிய அளவில், குறைந்த செலவில் வாழ வசதியுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய வாழ்க்கைச் செலவின் அடிப்படையில்  தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், உலகில் வாழ்வதற்காக குறைந்த செலவுடைய நாடாக இந்தியா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களுக்கு அடிப்படைத் தேவையாக உள்ள  பொருட்களின் விலை நாட்டுக்கு நாடு பெரிய அளவில் வித்தியாசப்படுவதால், உலகின் சில நாடுகளின் மாதாந்தர‌ செலவு, வேறு பல நாடுகளின் பல மாதங்களுக்கான செலவாக காணப்படுகின்றது.

குறைந்த செலவில் வாழ வசதியுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், துனிசியா, அல்ஜீரியா, மல்டோவா, எகிப்து, மாசிடோனியா, சிரியா, கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.

குறைந்த வாழ்க்கைச் செலவுடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை 21வது இடத்தில் உள்ளது.

இந்த அறிக்கையின்படி, இலங்கையின் 3 மாத வாழ்க்கைச் செலவு, ஆஸ்திரேலியாவின் ஒரு மாத செலவிற்கு சமம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம் : Tamizhulagam/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.