2016-09-13 16:23:00

இறைவனில் முழுநம்பிக்கை கொள்ளும் விசுவாசத்திற்காக செபிப்போம்


செப்.13,2016. 'நம் வாழ்வின் எத்தகையச் சூழலிலும் நாம் கடவுள் மீது முழு நம்பிக்கை கொண்டிருப்பதை அனுமதிக்கும் விசுவாசத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம்' என, இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்மாதம் 19ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில் துவங்கும் அமைதிக்கான இரண்டுநாள் பல்சமய சந்திப்பு குறித்து, தன் கருத்துக்களை, இத்தாலிய பத்திரிகையொன்றில் பகிர்ந்துள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உலக அமைதிக்கான முயற்சியில், செபத்தின் வலிமையைக் காட்டும் நோக்கில், உலக மதங்களோடு இணைந்து 1986ம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்

அவர்கள் துவக்கிய இந்த செப முயற்சி, இன்றளவும், வெளிப்படையாக, அதே அசிசி நகரில் இடம்பெற உள்ளதைச் தன் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் பரோலின்.

இன்றைய உலகம் விடுக்கும் சவால்கள், மதங்களின் சக்தி போன்றவை குறித்தும், ‘Corriere della Sera’ என்ற இத்தாலிய நாளிதழின் செவ்வாய் பதிப்பில் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.